/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை
/
திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை
ADDED : செப் 23, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ஆட்டுக்குட்டி சுரேஷ், 40. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், நேற்று மாலை வீட்டுக்கு அருகே, நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், சுரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது.
கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடைய சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்ரீரங்கம் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.