/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி மேயர் ஆலோசனை ஸ்ரீரங்கத்தில் பாதாள சாக்கடை திட்டம்
/
திருச்சி மேயர் ஆலோசனை ஸ்ரீரங்கத்தில் பாதாள சாக்கடை திட்டம்
திருச்சி மேயர் ஆலோசனை ஸ்ரீரங்கத்தில் பாதாள சாக்கடை திட்டம்
திருச்சி மேயர் ஆலோசனை ஸ்ரீரங்கத்தில் பாதாள சாக்கடை திட்டம்
ADDED : ஜூலை 29, 2011 11:43 PM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் விரிவு படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது.திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திலும் விரிவு படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை வகித்தார்.மாநகராட்சி கமிஷனர் பால்சாமி முன்னிலை வகித்து பேசியதாவது:ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பாதாள சாக்கடைத்திட்டம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ஒன்று முதல் ஆறு வார்டுகளுக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடைத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். பாதாள சாக்கடை திட்டம் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் கருத்துக்கள் சொல்லலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்சோதி, இன்ஜினியர் ராஜா முகமது, உதவி கமிஷனர் சுப்பு, கோட்ட தலைவர் குமரேசன், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி,ரங்கன், ஜவகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.