/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பி.எட்., கல்வித்தகுதி ஆன்-லைனில் பதிவு
/
பி.எட்., கல்வித்தகுதி ஆன்-லைனில் பதிவு
ADDED : செப் 03, 2011 12:28 AM
திருச்சி: 'பி.எட்., பயின்ற மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து கொள்ளலாம்' என திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தாண்டு பி.எட்., படித்தவர்கள் மதிப்பெண் சான்று பெற்று தாங்கள் படித்த கல்லூரியிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பெற பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த நாள் முதல் வேலைவாய்ப்பு பதிவு மூப்பினையும் அன்றைய நாளில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வெப்சைட் முகவரி: தீதீதீ.tணதிஞுடூச்டிதிச்ச்டிணீணீத.ஞ்ணிதி.டிண.ஏற்கனவே கல்வி தகுதியை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பி.எட்., கல்வி தகுதியை கூடுதல் கல்வி தகுதியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் கல்வி தகுதி சான்றுகளுடன், மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு மற்றும் பி.எட்.,சான்றுகளுடன் வேலைவாய்ப்புக்காக படித்த கல்லூரியிலேயே பதிவு செய்யலாம். அதேபோல் முதுகலை கல்வி தகுதியை பதிவு செய்யாதவர்களும், பி.எட்., கல்வி தகுதியுடன் முதுகலை படிப்பையும் பதிவு செய்து கொள்ளலாம்.