/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தரிசனத்துக்கு ரூ.200 வசூலித்த இருவர் கைது
/
தரிசனத்துக்கு ரூ.200 வசூலித்த இருவர் கைது
ADDED : டிச 22, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி,:சபரிமலை சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கூடுவதை சாதமாக்கிக் கொண்டு, சிலர் பணம் வாங்கிக் கொண்டு, பக்தர்களை சுவாமி தரிசனத்துக்கு குறுக்கு வழியில் அழைத்துச் செல்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கோவிலில், நேரடியாக சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஒருவர் பக்தர்களிடம் தலா 200 ரூபாய் வசூலிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின்படி, சமயபுரம் போலீசார், தங்கப்பழம் என்பவர் உட்பட இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.