/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பண மோசடியில் ஈடுபட்ட சீனர் இருவர் சிக்கினர்
/
பண மோசடியில் ஈடுபட்ட சீனர் இருவர் சிக்கினர்
ADDED : நவ 15, 2024 02:18 AM
திருச்சி:திருச்சி மத்திய சிறை வளாகத்தில், வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இதில், குற்ற செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமுக்கு, டில்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை, அமலாக்கத்துறை டி.எஸ்.பி., தேவேந்தர் குமார் தலைமையில் அதிகாரிகள் வந்தனர்.
ஏற்கனவே ஆன்லைன் பண மோசடி வழக்கில் சிக்கி, திருச்சி சிறப்பு முகாமில் கடந்த, 2021ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த ஷியா மாக், 29, யுவான் லுன், 37, ஆகியோரிடம், அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர்கள் மேற்கொண்ட ஆன்லைன் பணமோசடி குறித்து விசாரணை நடத்தினர். பல கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மோசடிகள் தொடர்பான குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதையடுத்து அவர்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, திருச்சி கலெக்டர் பிரவீன்குமாருக்கு தகவல் தெரிவித்து, நேற்று காலை சென்னை அழைத்துச் சென்றனர்.