/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு இரண்டு பெண்கள் கைது
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு இரண்டு பெண்கள் கைது
ADDED : ஏப் 18, 2025 02:57 AM
திருச்சி:அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பஸ்சில் வீடு திரும்பிய மூதாட்டியிடம், செயினை பறித்த, இரு பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள், 75. இவர் நேற்று காலை, மணப்பாறை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்கச் சென்று விட்டு, வீடு திரும்ப அரசு டவுன் பஸ்சில் ஏறி வந்துள்ளார்.
மாரியம்மன் கோவில் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது, இறங்க முற்பட்ட பெரியம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த, மூன்று சவரன் செயினை இரு பெண்கள் பறித்துள்ளனர். மூதாட்டி சத்தமிடவே, பஸ்சில் வந்தவர்களும், பஸ் ஸ்டாப்பில் இரு ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து அவர்களை கையும், களவுமாக பிடித்து, மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஆர்த்தி, 39, தேவி, 43, ஆகிய இருவர் மீது, பல்வேறு ஊர்களில், செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.