/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கணவரை கொலை செய்த மனைவி, காதலனுக்கு 'ஆயுள்'
/
கணவரை கொலை செய்த மனைவி, காதலனுக்கு 'ஆயுள்'
ADDED : மே 16, 2025 07:25 AM

திருச்சி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாய்பேச முடியாத கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி, தாராநல்லுார் பூக்கொல்லையைச் சேர்ந்தவர் தொழிலாளி ஷேக் தாவூத், 46. இவரது மனைவி ரஹ்மத் பேகம், 40. ஷேக் தாவூத் வாய் பேச முடியாதவர். ரஹ்மத் பேகத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இது கணவருக்கு தெரியவரவே, 2021 ஜூன், 4ம் தேதி இரவு, பாலில் துாக்கமாத்திரை கலந்து கொடுத்து, ரஹ்மத் பேகமும், அப்துல் அஜீஸ் இருவரும், ஷேக் தாவூத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்தனர்.
காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணை, திருச்சி, ஒன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.
இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.