ADDED : ஏப் 04, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த தம்பதியின் மகள், மணப்பாறையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், ஏப்., 1ம் தேதி பள்ளி சென்றுவிட்டு, பஸ்சில் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இரு இளைஞர்கள், மாணவியை வழிமறித்து தவறாக நடக்க முயன்றுள்ளனர். மாணவி கூச்சலிட்டதால், இளைஞர்கள் தப்பியோடினர். மாணவியின் பெற்றோர், மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்கில், பணப்பட்டியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் கிளீனர் பார்த்திபன், 23, சீத்தப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

