ADDED : ஜன 15, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் அருகே உள்ள முடுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 48; பிளம்பர். இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர் ராகவேந்திரன் என்பவருடன், முடுக்கப்பட்டியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார். அப்போது அங்கு சிலருடன் போதையில் ஏற்பட்ட தகராறில், ஆறு பேர் கும்பல் வெள்ளைசாமியை அடித்து கொலை செய்தது.
கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

