/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீஸ் வேனை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது
/
போலீஸ் வேனை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 23, 2024 02:30 AM

திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் அருகே அழகிரிபுரம் டாஸ்மாக் கடை ஒட்டிய பகுதியில், மது பிரியர்களுக்கான பிரியாணி, பிரைடு ரைஸ், சில்லி சிக்கன் கடைகள் உள்ளன. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பகுதியில், மாநகர போலீஸ் வேனை நிறுத்தி வைத்திருந்தனர். மர்ம நபர்கள், அந்த வாகனத்தின் கண்ணாடிகளை நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் உடைத்து சேதப்படுத்தினர்.
ஆயுதப்படை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., எட்வின் புகார்படி, ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்தனர். டாஸ்மாக் கடை அருகே போலீஸ் வாகனம் தினமும் நிற்பதால், கடைகளில் வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கருதிய அழகிரிபுரத்தைச் சேர்ந்த விக்கி, 30, என்ற வாலிபர், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.