/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
புதைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் பறிமுதல்
/
புதைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 21, 2024 09:51 PM
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், கடந்த 19ம் தேதி இரவு, வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு கணக்கில் வராத 2.14 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். சார் - பதிவாளர் பொறுப்பு வகிக்கும் நித்தியானந்தத்திடம் விசாரணை நடத்தினர்.
அதையடுத்து, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, வேலுார் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். மேலும், சில போலீசார், அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அவரது வீட்டில் பணம் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. எனினும், வீட்டில் புகுந்த அதிகாரிகளிடம் பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனால், 80 சவரன் நகை, 1.75 லட்சம் ரூபாய் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகத்தின்படி, வீட்டின் பின்புறம் சென்ற போலீசார் சோதனை நடத்தியதில், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாயை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.