/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி காயம் 2 பேர் கைது
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி காயம் 2 பேர் கைது
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி காயம் 2 பேர் கைது
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி காயம் 2 பேர் கைது
ADDED : ஆக 09, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்பூர்:வேலுார் மாவட்டம், பாலுார் ஊராட்சியில், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 55, என்பவர், கடந்த, 2ம் தேதி மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றார்.
அப்போது, பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த, முறைகேடான நாட்டு வெடிகுண்டை சுப்பிரமணி மிதித்ததில், அது வெடித்து, அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது.
உம்ராபாத் போலீசார் விசாரித்து, விவசாய நிலத்தில், முறைகேடாக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்திய சரத்குமார், 25, தட்சிணாமூர்த்தி, 42, ஆகியோரை கைது செய்தனர்.