/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
/
சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஏப் 28, 2024 02:30 AM
வேலுார்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள, 30 வயது வாலிபர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். கடந்த, 2020ல் கிறிஸ்துமஸ் கொண்டாட, அரக்கோணத்தை சேர்ந்த மகள் உறவு முறை கொண்ட, 13 வயது சிறுமி சென்னை சென்றார். விழா கொண்டாடி விட்டு, அன்றிரவு சித்தப்பா உறவு முறை கொண்ட வாலிபர் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார்.
தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்த சிறுமியை மிரட்டி, அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி எட்டு மாத கர்ப்பமானார். சிறுமியின் தாய் புகார்படி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசார், வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு, வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கலைப்பொன்னி, வாலிபருக்கு 20 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

