/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
200 பேருக்கு டெங்கு, டைபாய்டு செம்புராயநல்லுார் மக்கள் அச்சம்
/
200 பேருக்கு டெங்கு, டைபாய்டு செம்புராயநல்லுார் மக்கள் அச்சம்
200 பேருக்கு டெங்கு, டைபாய்டு செம்புராயநல்லுார் மக்கள் அச்சம்
200 பேருக்கு டெங்கு, டைபாய்டு செம்புராயநல்லுார் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 31, 2024 09:11 PM
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த செம்புராயநல்லுார் ஊராட்சியில், இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குப்பை மற்றும் கால்வாய் பிரச்னையால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில், இப்பகுதி மக்கள் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இதில், பலருக்கும் காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால், ரத்த பரிசோதனையில், டெங்கு, டைபாய்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை, 200 பேருக்கு இவ்வகையான காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த சுகாதார துறையினர், கிருமி நாசினி மட்டும் தெளித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் கூறியதாவது:
ஊராட்சி தலைவர் இந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் தான் எப்போதும் இருப்பார். பஞ்சாயத்து நிர்வாகம் முற்றிலும் செயல்படவில்லை. குப்பை, கொசு ஒழிப்பு என, அடிப்படை தேவைகளுக்கு யாரை அணுகுவது என தெரியவில்லை.
இப்பகுதியில் சுகாதார சீர்கேட்டினால், காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது. சஞ்சய் என்ற சிறுவன் காய்ச்சலில் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிலர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சுகாதாரத்துறையினர் மருந்து மட்டும் தெளித்தனர். மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்தால் மட்டுமே மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.