/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பண்ணையில் மின் கசிவால் 2,500 கோழிகள் கருகி பலி
/
பண்ணையில் மின் கசிவால் 2,500 கோழிகள் கருகி பலி
ADDED : ஜூன் 30, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, மின்கசிவால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2,500 கோழிகள் கருகி பலியாகின.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 51; கவுக்காப்பட்டு பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று மதியம் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், 2,500 கோழிகள் கருகி பலியாகி விட்டன. இதுகுறித்து அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.