/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
34.70 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது
/
34.70 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2024 07:41 PM
வேலுார்:வேலுார் மாவட்ட, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவலம் அருகே வாகன சோதனை நடத்தினர். பெங்களூரு நோக்கி சென்ற லாரி மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில், 34.70 டன் ரேஷன் அரிசி இருப்பதை அறிந்தனர். லாரி டிரைவரும், உரிமையாளருமான சண்முகம், 52, கிளீனர் ஹரிகிருஷ்ணன், 46, கார் டிரைவர் மோகன், 45, ரேஷன் அரிசி கடத்தல்காரர் செஞ்சியை சேர்ந்த சண்முகம், 52, ஆகியோரை கைது செய்து, லாரி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த அரிசியை செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் வாங்கி, கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு எடுத்து சென்றது தெரிந்தது. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த செய்யூர் அரிசி ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கத்தை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.