/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
காதல் மனைவியை கர்ப்பமாகி விவாகரத்து செய்வதாக கூறிய ராணுவ வீரர் மீது வழக்கு

ADDED : ஆக 07, 2024 11:24 PM
வேலுார்:வேலுார் அருகே, காதல் மனைவியை கர்ப்பமாக்கி விட்டு, விவாகரத்து செய்வதாக கூறிய, ராணுவ வீரர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ், 25; இவர், காட்பாடியை சேர்ந்த, 23 வயது பெண்ணை காதலித்து, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், ஜெயப்பிரகாஷின் பெற்றோர், அப்பெண்ணை வீட்டில் சேர்க்க மறுத்தனர். இதனால் ஜெயப்பிரகாஷ், மனைவியின் பெற்றோர் வீட்டில் தங்கி வந்தார். பணியிலிருந்து விடுமுறையில் வரும்போது, மனைவியின் பெற்றோர் வீட்டிலேயே தங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், விடுமுறையில் வந்த அவர், தற்போது, 8 மாத கர்ப்பமாக உள்ள மனைவியை பார்க்க செல்லவில்லை. மனைவி பேச முயன்ற போதும் தட்டி கழித்து, அவரை விவாகரத்து செய்யப்போவதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி மனைவி, காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.