/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கும்பல் சிக்கியது
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கும்பல் சிக்கியது
ADDED : செப் 06, 2024 03:02 AM
வேலுார்:வேலுார், முத்து மண்டபம் பகுதியை சேர்ந்த மாணவர்கள், சிறுவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பதாக வந்த புகார்படி, பாகாயம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த சிறுவனிடம் போதை மாத்திரைகள் சப்ளை செய்த வாலிபரை மடக்கினர்.
விசாரணையில் வேலுார் ஓல்டு டவுன் பகுதி கிஷோர்குமார் 19, என தெரிந்தது. அவரது மாமா ரஞ்சித் 29, பள்ளிக்கொண்டாவை சேர்ந்த அபிஷேக்கிடம் போதை மாத்திரை, சிரிஞ்ச் வாங்கி, வேலுார் கஸ்பாவை சேர்ந்த பூபாலன் 27, ஓல்டு டவுன் விக்னேஷ், 19, சிவக்குமார், 38, ஆகியோருடன் சேர்ந்து, போதை மாத்திரை விற்றது தெரிந்தது. கிஷோர்குமாரிடம் தலா, 10 போதை மாத்திரை கொண்ட, 20 பெட்டி, பைக்கை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரஞ்சித், கிஷோர்குமார், விக்னேஷ், சிவக்குமார், 38, மற்றும் பூபாலன், 27, என ஐந்து பேரை கைது செய்து, கார், நான்கு பைக்குகள், 1,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் பதுங்கியுள்ள அபிஷேக்கை பிடிக்க, தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.