/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேறோருவரின் மனைவியை 2வதாக திருமணம் செய்தவர் கைது
/
வேறோருவரின் மனைவியை 2வதாக திருமணம் செய்தவர் கைது
ADDED : மே 28, 2024 09:03 PM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் சோனியா, 27; இவரது கணவர் சென்னையை சேர்ந்த கார் டிரைவர். இவர்களுக்கு, 2 மகன்கள். சோனியாக மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறார். இவருக்கு, தனியார் நிதி நிறுவன கடன் பிரிவில் பணியாற்றி வரும், வேலுார் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த சின்னபாபு, 36, என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
சின்னபாபு, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என, சோனியாவின் மொபைல்போனிற்கு மேசேஜ் அனுப்பினார். இதைப்பார்த்த சோனியாவின் கணவர், சோனியாவை விட்டு, சில மாதங்களுக்கு முன் பிரிந்தார். வேதனையடைந்த சோனியா, சின்னபாபுவை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியதால், சின்னபாபுவும் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வசித்தனர்.
இந்நிலையில், சின்னபாபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது தெரிந்து சோனியா அதிர்ச்சியடைந்தார். அவர், சின்னபாபு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்த, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாருக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் விசாரித்து, முதல் திருமணத்தை மறைத்து, 2வதாக சோனியாவை திருமணம் செய்த, சின்னபாபுவை கைது செய்தனர்.