/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
/
இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
ADDED : ஜூலை 31, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார், சலவன்பேட்டை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரகு, 28; இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பருடன் கணியம்பாடியிலிருந்து வேலுார் நோக்கி பைக்கில் சென்றார். கணியம்பாடி பெட்ரோல் பங்க் அருகே, இயற்கை உபாதை கழிக்க அங்கிருந்த பழைய கட்டடம் அருகே ஒதுங்கினார்.
அங்கிருந்த சிதிலமடைந்திருந்த சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டில் சிக்கினார். அவரை, உடன் சென்ற நண்பர் மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.