/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வெந்நீர் கொட்டி குழந்தை காயம் அங்கன்வாடி ஊழியர் 'சஸ்பெண்ட்'
/
வெந்நீர் கொட்டி குழந்தை காயம் அங்கன்வாடி ஊழியர் 'சஸ்பெண்ட்'
வெந்நீர் கொட்டி குழந்தை காயம் அங்கன்வாடி ஊழியர் 'சஸ்பெண்ட்'
வெந்நீர் கொட்டி குழந்தை காயம் அங்கன்வாடி ஊழியர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 28, 2024 02:53 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுார் பேட்டையில், தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் அங்கன்வாடி பணியாளர் துர்கா, 45, மதிய உணவு சமைத்தபோது, எதிர்பாராதவிதமாக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் கீழே கொட்டியது.
அப்போது அருகில் இருந்த, இரு குழந்தைகள் மீது வெந்நீர் பட்டு காயமடைந்து அலறினர். அங்கிருந்தோர் குழந்தைகளை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி ஆகியோர் விசாரித்ததில், அங்கன்வாடி மையத்தில் சமையலறை தனியாக இல்லாமல், குழந்தைகள் அமரும் இடத்திலேயே உணவு சமைப்பது தெரியவந்தது. பணியில் கவனக்குறைவாக இருந்த துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி, அங்கன்வாடி மைய கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.