/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஆசிய ஜூனியர் பேட்மின்டன் காட்பாடி மாணவி தேர்வு
/
ஆசிய ஜூனியர் பேட்மின்டன் காட்பாடி மாணவி தேர்வு
ADDED : ஜூலை 26, 2024 12:30 AM
வேலுார்:சீனாவின் செங்குடு நகரில் வரும் ஆகஸ்ட் மாதம், 20 முதல், 25ம் தேதி வரை ஆசிய ஜூனியர் சாம்பியன் ஷிப் பேட்மின்டன் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டி, 17 வயது மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர் என, இரு பிரிவுகளாக நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து, 5 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4 பேர், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் போட்டியிலும், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷினிஸ்ரீ, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.
ஆதர்ஷினிஸ்ரீ, ஏற்கனவே, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில, தேசிய போட்டிகளிலும், இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேச போட்டியிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.