/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போலி ஆவணத்தில் மனை பதிவு பத்திர எழுத்தர் உரிமம் ரத்து
/
போலி ஆவணத்தில் மனை பதிவு பத்திர எழுத்தர் உரிமம் ரத்து
போலி ஆவணத்தில் மனை பதிவு பத்திர எழுத்தர் உரிமம் ரத்து
போலி ஆவணத்தில் மனை பதிவு பத்திர எழுத்தர் உரிமம் ரத்து
ADDED : ஆக 09, 2024 02:41 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த காரணாம்பட்டைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கடந்த, 2003ல், தன்னுடைய இரண்டு வீட்டுமனைகளை வேறு நபருக்கு விற்பனை செய்தார்.
பின்னர், 2021ல் நாகராஜின் மகன் கண்ணன், தன் மகன்களுக்கு தான செட்டில்மென்டாக, நாகராஜன் விற்பனை செய்த இரு வீட்டுமனைகளுக்கு போலி ஆவணம் தயாரித்து, பத்திர எழுத்தர் ஸ்ரீதர் எழுதி கொடுத்து, பத்திரப்பதிவு செய்தார்.
இதுகுறித்த புகாரின்படி, போலி ஆவணம் வாயிலாக பத்திரப்பதிவு செய்த, அப்போதையை சார் - பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பத்திர எழுத்தர் ஸ்ரீதருக்கும், 6 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதர், மீண்டும் போலி ஆவணம் வாயிலாக பத்திரங்களை பதிவு செய்யும் மோசடிக்கு உடந்தையாக இருப்பதாக, வேலுார் பதிவு மண்டல டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு புகார் சென்றது.
சார் - பதிவாளர்கள் விசாரணையில், அது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரின் பத்திர எழுத்தர், 'ஏ கிரேட்' உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து, வேலுார் பதிவுத்துறை டி.ஐ.ஜி., அருள்சாமி உத்தரவிட்டார்.