/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவியை வெட்டிய கொடூர சித்தப்பா கைது
/
மாணவியை வெட்டிய கொடூர சித்தப்பா கைது
ADDED : மார் 06, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 43. இவரது தம்பி சுரேஷ்பாபு, 39. இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கினர்.
சுரேஷ்பாபு கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். பெற்றோர் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார், சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.