/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பைக் மீது லாரி மோதல் தந்தை, மகன் உயிரிழப்பு
/
பைக் மீது லாரி மோதல் தந்தை, மகன் உயிரிழப்பு
ADDED : பிப் 24, 2025 02:43 AM
பள்ளிகொண்டா: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தார்வழி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 48; திருமண மண்டப வாட்ச்மேன்.
இவரது மகன் நிதிஷ்குமார், 21; கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடி கொண்டிருந்தார். இருவரும் ஹோண்டா பைக்கில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு பள்ளிகொண்டா சென்றனர். பைக்கை நிதிஷ்குமார் ஓட்டினார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தனேரி அருகே சென்றபோது, வேலுாரில் இருந்து ஆம்பூர் நோக்கி அதிகவேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது.
இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நிதிஷ்குமார் வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.