/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போனில் மூழ்கிய மனைவி கையை வெட்டிய கணவர் கைது
/
போனில் மூழ்கிய மனைவி கையை வெட்டிய கணவர் கைது
ADDED : ஏப் 27, 2024 01:30 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் பிச்சனுார் பேட்டையைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சேகர், 42, இவரது மனைவி ரேவதி, 35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் படிக்கிறார்.
கடந்த சில மாதங்களாக ரேவதி அடிக்கடி மொபைல் போனில் பேசியும், சமூக வலைதளங்களை பார்ப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இதை சேகர் பலமுறை கண்டித்தார்; அவர் கண்டுகொள்ளவில்லை.
நேற்று முன்தினம் இரவு மொபைல்போனில், ரேவதி யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டில் நுழைந்த சேகர் அதை கண்டித்தார். அப்போதும் அதை கண்டு கொள்ளாமல், மொபைலில் அந்த பெண் பேசியபடி இருந்தார்.
ஆத்திரமடைந்த சேகர், அருகில் கிடந்த அரிவாள் மனையால் மனைவியின் வலது கையை வெட்டினார். அலறித் துடித்த ரேவதியை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து, சேகரை கைது செய்தனர்.

