/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலை இல்லாத வாலிபருக்கு ரூ.3.50 கோடி வரி பாக்கி 'மெசேஜ்'
/
வேலை இல்லாத வாலிபருக்கு ரூ.3.50 கோடி வரி பாக்கி 'மெசேஜ்'
வேலை இல்லாத வாலிபருக்கு ரூ.3.50 கோடி வரி பாக்கி 'மெசேஜ்'
வேலை இல்லாத வாலிபருக்கு ரூ.3.50 கோடி வரி பாக்கி 'மெசேஜ்'
ADDED : ஜூலை 03, 2024 02:07 AM
வேலுார்:வேலுார் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது நயிமுதீன், 32, டிப்ளமோ படித்தவர்; வேலை தேடி வருகிறார். மார்ச் மாதம், அவரது மொபைல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது.
அதில், 2023 - 2024ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதை விசாரித்ததில், அவரது பெயரில் கோவையில் நிறுவனம் இயங்கி வருவதும், அதில் லட்சக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததும் தெரிந்தது.
அந்த முகவரிக்கு, முகமது நயிமுதீன் சென்று பார்த்தபோது, அங்கு எந்த நிறுவனமும் இல்லை. அவரது பெயரில் போலியாக ஜி.எஸ்.டி., எண் பெற்று மோசடி செய்திருப்பது தெரிந்தது.
மேலும், ஆன்லைனில் பார்த்தபோது, கடந்த மாதம் வரை அவர், 3.50 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என இருந்தது.
அதைக் கண்டு, முகமது நயிமுதீன் அதிர்ச்சியடைந்தார்-. இதையடுத்து அவர், வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமியை நேற்று சந்தித்து புகார் அளித்தார்.