/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுவனை கடத்தி திருமணம் இளம்பெண்ணுக்கு வலை
/
சிறுவனை கடத்தி திருமணம் இளம்பெண்ணுக்கு வலை
ADDED : செப் 05, 2024 08:40 PM
வேலுார்:வேலுார் அருகே, சிறுவனை கடத்தி திருமணம் செய்த பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர், 22 வயது பெண். இவர், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே தனியார் ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர், 17 வயது சிறுவனுடன் கடந்த ஓராண்டாக நெருக்கமாக பழகி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார். அதன் பின் இருவரும் வீடு திரும்பவில்லை.
இருவரது குடும்பத்தினரும் விசாரித்ததில், சிறுவனை அழைத்து சென்ற இளம்பெண், குடியாத்தம் அடுத்த சிந்தகணவாய் முனீஸ்வரர் கோவிலில் வைத்து, திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து இருவரும் தலைமறைவாக உள்ளார். இது குறித்து பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், சிறுவனையும், இளம்பெண்ணையும் தேடி வருகின்றனர்.