/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு
/
கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு
கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு
கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு
ADDED : ஜூன் 18, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிகொண்டா : வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன், 29, மருந்து விற்பனையாளர். இவர் மனைவி தமிழ்செல்வி, 24. வரதட்சணை கேட்டு பாலமுருகன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மனமுடைந்த தமிழ்செல்வி, 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், மார்ச் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அவர், மனைவி இறந்த துக்கத்தில், நேற்று முன்தினம் மாலை மது அருந்திவிட்டு, தான் கொண்டு சென்ற பைக்கிலிருந்து, பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.