/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஆடை கழற்றி அட்டகாசம் போதை போலீசுக்கு 'கம்பி'
/
ஆடை கழற்றி அட்டகாசம் போதை போலீசுக்கு 'கம்பி'
ADDED : பிப் 26, 2025 02:06 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர் அருள் கண்மணி, 37. இவர், மது போதையில், நேற்று முன்தினம் மாலை, கே.வி.குப்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் ஷூ கம்பெனி வேன் டிரைவர் சேட்டுவிடம் தகராறு செய்து, அவரை கே.வி. குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
அவர் மீது வழக்குப்பதிய, பணியில் இருந்த பெண் போலீஸ் நந்தினியிடம் கூறினார். அவர், 'இன்ஸ்பெக்டர் வரட்டும்' எனக்கூற, ஏற்காத அருள் திடீரென தன் உடைகளை கழற்றி வீசினார். பெண் போலீசார் அதிர்ச்சியில் வெளியே ஓடினர்.
இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், அருளை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த டாக்டர் செந்திலை, அருள்மணி ஆபாசமாக பேசி, கண்ணாடி கதவுகளை உடைத்தார். அப்போது, கண்ணாடி துண்டுகள் கையில் குத்தி ரத்தம் கொட்டியது.
கே.வி.குப்பம் போலீசார், சேட்டு, நந்தினி புகாரிலும், குடியாத்தம் போலீசார், டாக்டர் செந்தில் புகாரிலும் அருள் கண்மணியை கைது செய்தனர்.

