/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தோல் கழிவு நீர் கொட்டாற்றில் திறக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம்
/
தோல் கழிவு நீர் கொட்டாற்றில் திறக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம்
தோல் கழிவு நீர் கொட்டாற்றில் திறக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம்
தோல் கழிவு நீர் கொட்டாற்றில் திறக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம்
ADDED : மே 11, 2024 07:10 AM
வேலுார் : வேலுார் அருகே, தோல் கழிவு நீர் கொட்டாற்றில் திறந்து விடப்பட்டதால், துர்நாற்றம் வீசிய நிலையில் நுரையுடன் ஓடியது.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வீசி வந்த நிலையில், நேற்று முன்தினம் கன மழை பெய்தது. அதனால், அப்பகுதியில் உள்ள கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதை சாதகமாக பயன்படுத்திய தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள், கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே கொட்டாற்றில் திறந்துவிட்டனர்.
இவை ஆற்றில் ஓடிய மழை நீருடன் சேர்ந்து, துர்நாற்றத்துடன் நுரையுடன் ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.