/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
காவிரி - குண்டாறு திட்டத்தில் உபரி நீர் கடலில் கலக்காமல் தடுக்கப்படுகிது: அமைச்சர் துரைமுருகன்
/
காவிரி - குண்டாறு திட்டத்தில் உபரி நீர் கடலில் கலக்காமல் தடுக்கப்படுகிது: அமைச்சர் துரைமுருகன்
காவிரி - குண்டாறு திட்டத்தில் உபரி நீர் கடலில் கலக்காமல் தடுக்கப்படுகிது: அமைச்சர் துரைமுருகன்
காவிரி - குண்டாறு திட்டத்தில் உபரி நீர் கடலில் கலக்காமல் தடுக்கப்படுகிது: அமைச்சர் துரைமுருகன்
ADDED : ஜூலை 31, 2024 10:35 PM
வேலுார்:''காவிரி - குண்டாறு திட்டத்தில், உபரி நீர் வீணாக சென்று கடலில் கலக்காமல் தடுக்கப்பட்டு, விவசாயத்திற்கும், தொழில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த செம்பராய நல்லுார் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் திட்டம், புதிய அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை துவக்கி வைத்து, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்க, குழந்தை பருவத்திலேயே நல்ல கருத்துக்களை, ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். சிறிய வயதில் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல பழக்கங்கள் தான், பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறோம் என்பதை நினையாமல், தெய்வங்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்ற எண்ணத்தில், கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தையும், தெய்வமும் ஒன்று.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும். சரபங்கா நீரேற்றும் திட்டத்தில் கடைசி சில ஏரிகளுக்கு நீர் ஏற்றுவதில் சில பிரச்னை ஏற்பட்டது.
தண்ணீர் எடுத்துச் செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருப்பதால், அவர்கள் நிலத்தை வழங்காமல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர். எனவே, சில ஏரிகளை தவிர, மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
மழைக்காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க, தமிழக அரசு, சரபங்கா நீரேற்றும் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், மேலும் பல இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, அந்த நீர்பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காவிரி - குண்டாறு திட்டத்தினால், உபரி நீர் வீணாக சென்று கடலில் கலக்காமல் தடுக்கப்பட்டு, விவசாயத்திற்கும், தொழில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.