/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது
/
மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது
ADDED : ஏப் 27, 2024 01:39 AM
பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சின்னதோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ பாதிரியார் பாபு, 54. இவருக்கு சொந்தமாக கீழ்பட்டி கிராமத்தில், 5 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சர்ச் கட்டும் பணிக்காக, ஆட்களை வைத்து சுத்தம் செய்தார். அப்போது, அருகில் இருக்கும் பொது இடத்தையும் சேர்த்து சுத்தம் செய்தனர்.
மேலும், அந்த இடத்தில் பொதுமக்கள், தினமும் பால் ஊற்றி பூ வைத்து வழிபாடு செய்து வந்த பாம்பு புற்றையும் சேர்த்து சுத்தம் செய்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, 54, என்பவர் தட்டி கேட்டார். அப்போது கிறிஸ்துவ பாதிரியார் பாபு, அவதுாறாக பேசி, மதம் மாற சொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சரஸ்வதி, மேல்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் பாபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

