ADDED : டிச 29, 2024 08:11 AM

அ நிறம் | அளவு
வேலுார் : வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பெருமாள் கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பழமையான கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இந்த கல்வெட்டை, விழுப்புரம் மாவட்ட தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:
இது, 1,000 ஆண்டு பழமையான கல்வெட்டு. சோழ அரசரான, 1ம் பராந்தக சோழனின் புகழை எடுத்துரைக்கும் வகையில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்பாடி எனும் வீரநாராயணபுரம் இந்த ஊரின் பெயர் என்றும், முதலாம் பராந்தக சோழரால், இப்பகுதியில் ஸ்ரீவீர நாராயண பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது என்றும், இங்கு வியாபாரிகள் அதிகமானோர் வசித்ததாகவும், இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
