/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரூ.11 லட்சம் வாங்கியவர் இறப்பு கடன் கொடுத்த தம்பதி தற்கொலை
/
ரூ.11 லட்சம் வாங்கியவர் இறப்பு கடன் கொடுத்த தம்பதி தற்கொலை
ரூ.11 லட்சம் வாங்கியவர் இறப்பு கடன் கொடுத்த தம்பதி தற்கொலை
ரூ.11 லட்சம் வாங்கியவர் இறப்பு கடன் கொடுத்த தம்பதி தற்கொலை
ADDED : செப் 23, 2024 02:23 AM
வேலுார்: வேலுார், சலவன்பேட்டையை சேர்ந்தவர் முருகேசன், 62. இவரது மனைவி மாலா, 60. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. முருகேசன் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, 11 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். கடன் பெற்றவர் மூன்று மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியின்றி இறந்தார்.
அவரது வீட்டுக்கு சென்ற தம்பதி, பணத்தை திருப்பி கேட்டனர். தருவதாக கூறி காலம் கடத்தி வந்த நிலையில், 'நீங்கள் கடன் கொடுத்தது தெரியாது. யாரிடம் கொடுத்தீர்களோ, அவரிடமே வாங்கிக் கொள்ளுங்கள்' என, சில நாட்களுக்கு முன் இறந்தவரின் குடும்பத்தார் கூறியுள்ளனர். விரக்தியடைந்த தம்பதி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
முருகேசன் எழுதிய கடிதத்தில், 'சலவன்பேட்டையை சேர்ந்த ஒருவர் எங்களிடம், 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அவர் இறந்து விட்டதால், மகன்களிடம் கேட்டபோது, இறந்தவரிடமே பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
இந்த மன உளைச்சலால் நானும், மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம்' என, எழுதப்பட்டிருந்தது. வேலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.