ADDED : ஜன 02, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி புத்துார் பகுதியைச் சேர்ந்த, 25 பேர், புத்தாண்டைக் கொண்டாட வேனில், ஒகேனக்கல் சென்றனர். அங்கு புத்தாண்டை கொண்டாடி விட்டு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த, 20 பேர் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருவலத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் மோகன், 32, கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

