தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ரயில் இன்ஜின் மீது ஏறி ரகளை செய்த வாலிபர்

ரயில் இன்ஜின் மீது ஏறி ரகளை செய்த வாலிபர்

ரயில் இன்ஜின் மீது ஏறி ரகளை செய்த வாலிபர்


ADDED : மார் 09, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்பாடி :வேலுார், காட்பாடியில், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரகளை செய்த வாலிபரை, போலீசார் மீட்டு, மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.பீஹார் மாநிலம், முதுபாணியைச் சேர்ந்தவர் மங்கள் குமார், 22. இவர், காட்பாடி பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை, 4ல் 'தாதர் எக்ஸ்பிரஸ்' ரயில் நின்றது. அப்போது, ரயில் இன்ஜின் மீது, திடீரென ஏறிய மங்கள் குமார், ரகளையில் ஈடுபட்டார். இன்ஜின் மீது உயர் அழுத்த மின்சார ஒயர்கள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த பயணியர் கூச்சலிட்டு, அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். அவர் இறங்க மறுத்ததால், இதுகுறித்து, ரயில்வே மின்சார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பின், ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதனால், காட்பாடி ரயில் நிலையத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், 1 மணி நேரம் தாமதமாக, அங்கிருந்து ரயில் புறப்பட்டது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மங்கள் குமார் தன்னிச்சையாக பேசிக்கொண்டு, யாருடைய கட்டளையையும் ஏற்காமல் சுற்றி திரிவதால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, சந்தேகிக்கப்படுகிறது. எனவே, சிகிச்சைக்காக அவரை, அடுக்கம்பாறை மனநல காப்பகத்திற்கு அனுப்பியுள்ளோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us