/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் 'சிசிடிவி'
/
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் 'சிசிடிவி'
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் 'சிசிடிவி'
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் 'சிசிடிவி'
ADDED : அக் 05, 2025 01:34 AM
ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த, ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில், ரயில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் இணைந்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ஜோலார்பேட்டை ரயில்வே பிளாட்பார்ம் -1 மற்றும், 2ல், அதிகளவு பயணிகளின் வருகை உள்ளது. இங்கு பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வேண்டும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து,'வாட்ஸாப்' குழு உருவாக்கி, எந்த புகார் வந்தாலும், தகவலை பரிமாறி கொள்ள வேண்டும்.
பிளாட்பார்ம்களில் இருக்கும் பயணிகளுக்கு குற்றம் சம்பந்தமாக, ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். பயணிகளை மிரட்டி, பண பறிப்பில் ஈடுபடும் திருநங்கைகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிய வேண்டும். மாதம் ஒரு முறை, திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும். ரயில் தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள், ரயில் மீது கல் எரிபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தனிப்படை அமைக்க வேண்டும். ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, காவல் நிலையத்தில், தற்போது, 32 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன.
அதை அதிகப்படுத்த வேண்டும். இதேபோன்று வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதலாக 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.