ADDED : நவ 10, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையிலிருந்து, பெங்களூருவுக்கு ஒரு பயணி நேற்று முன்தினம் பயணம் செய்தார்.
ரயிலில் குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு, பெட்ஷீட்,
தலையணை மற்றும் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகம் மூலம்
வழங்குவது வழக்கம். அதன்படி அந்த பயணிக்கு, வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் தாண்டியவுடன், ரயில்வே நிர்வாகம் மூலம், இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்-கப்பட்டது.
அதில் ஆல்கஹால் வாசனை வீசியதால், அதிர்ச்சியடைந்த அவர், தண்ணீர் பாட்டிலுடன் வீடியோ எடுத்து, அதை வைரலாக்கினார். இதனால், ரயில்வே நிர்வாகம் வழங்கிய குடிநீர் பாட்டிலில், எப்படி ஆல்கஹால் வந்தது என, பயணிகள் அதிர்ச்சி அடைந்-துள்ளனர்.