/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'போக்சோ'வில் கைது: தீயணைப்பாளர் சஸ்பெண்ட்
/
'போக்சோ'வில் கைது: தீயணைப்பாளர் சஸ்பெண்ட்
ADDED : பிப் 04, 2026 06:26 AM
வேலுார்: போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்ட தீயணைப்பாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் சசிகுமார், 31. இவர், வேலுார் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சசிகுமார், 17 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி உள்ளார். அச்சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று, நெருக்கமாக இருந்துள்ளார்.
தன் தவறை உணர்ந்த சிறுமி, சசிகுமாருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமியுடன் நெருக்கமாக இருந்த படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இது சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. சசிகுமார் மிரட்டுவது குறித்து, கட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சசிகுமார் போக்சோ வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து , தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால் உத்தரவின்படி, வேலுார் மாவட்ட தீயணைப்பு அதிகாரி வடிவேல், சசிகுமாரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.

