ADDED : ஜூன் 25, 2026 12:46 PM

அ நிறம் | அளவு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாஜ நிர்வாகிகள்,அணிபிரிவு நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாஜ விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் பேசியதாவது:
கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும்
தமிழகத்தில் பாஜக தேர்தலில் தோல்வியுற்றிருக்கலாம்.ஆனால் பாஜகவினுடைய சித்தாந்தம்,தேசிய நலன் கொண்ட கொள்கை எப்போதும் தோல்வியுறாது.
இன்று 70% இந்தியாவை பாஜக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
நாம் தமிழ்நாட்டில் தோல்வியுற்றதற்கு நம் கொள்கைகள் மக்களை சென்றடையாததே காரணம். பாஜகவின் வரலாறுகளைப் படியுங்கள், அதை செயல்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தசரதன்,மாநில செயற்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி,.நரசிம்மன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
