ADDED : மார் 01, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, கார் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், கல்லுாரைச் சேர்ந்தவர் விஷால், 19. இவர், குடியாத்தமில் உள்ள தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கல்லுார் மேம்பாலம் அருகே, டூ - வீலரில் சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த கார், விஷாலின் டூ - வீலர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த விஷால், படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஷால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
