/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க தி.மு.க., அரசு தயாராக இல்லை'
/
'தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க தி.மு.க., அரசு தயாராக இல்லை'
'தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க தி.மு.க., அரசு தயாராக இல்லை'
'தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க தி.மு.க., அரசு தயாராக இல்லை'
ADDED : பிப் 13, 2024 04:18 PM
வேலுார் : ''தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதற்கு, போதை பொருள் அமோக விற்பனையே காரணம். அதை தடுக்க, தி.மு.க., அரசு தயாராக இல்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
வேலுார் மற்றும் ராணிப்பேட்டை அடுத்த வாலாஜாவில் நடந்த, கட்சியினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு, பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகரம், கோயம்போடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே, அ.தி.மு.க., ஆட்சியில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின், தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, பணிகளை முழுமையாக முடிக்காமல், அவசர கதியில் திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த, 2 நாட்களுக்கு முன், போக்குவரத்து துறை அமைச்சர், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல், பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்த சூழ்நிலையையும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த வகையில், தி.மு.க., அரசு எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அதனால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது முதலே சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு போதை பொருள் அமோகமாக விற்பனை நடப்பதே முக்கிய காரணம். கஞ்சா போதையிலுள்ள, நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போதை பொருள் விற்பனையை தடுக்க, இந்த அரசு தயாராக இல்லை. இனியேனும், அதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.