/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மகளிடம் பாலியல் சீண்டல் முன்னாள் வீரருக்கு 'போக்சோ'
/
மகளிடம் பாலியல் சீண்டல் முன்னாள் வீரருக்கு 'போக்சோ'
மகளிடம் பாலியல் சீண்டல் முன்னாள் வீரருக்கு 'போக்சோ'
மகளிடம் பாலியல் சீண்டல் முன்னாள் வீரருக்கு 'போக்சோ'
ADDED : டிச 20, 2024 01:12 AM
குடியாத்தம்,:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த, 42 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறால், கணவரை பிரிந்த மனைவி, மகன், மகள்களுடன் திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் வசிக்கிறார்.
சில நாட்களுக்கு முன், மூத்த மகளான 16 வயது சிறுமி, தந்தையை பார்க்க குடியாத்தம் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றார். அப்போது தந்தையான முன்னாள் ராணுவ வீரர், மகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி தப்பிச்சென்று, தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து , சிறுமியின் தாய் கொடுத்த புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து விசாரிக்கின்றனர்.