/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிமென்ட் டீலர்ஷிப் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.7.36 லட்சம் மோசடி
/
சிமென்ட் டீலர்ஷிப் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.7.36 லட்சம் மோசடி
சிமென்ட் டீலர்ஷிப் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.7.36 லட்சம் மோசடி
சிமென்ட் டீலர்ஷிப் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.7.36 லட்சம் மோசடி
ADDED : நவ 01, 2024 07:00 AM
வேலுார் : சிமென்ட் நிறுவன டீலர் ஷிப் தருவதாக கூறி, 7.36 லட்சம் ரூபாய் விவசாயியிடம் மோசடி நடந்துள்ளது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துாரை சேர்ந்தவர் விவசாயி மனோஜ்குமார், 29. இவர் கடந்த சில மாதங்களாக, 'பேஸ்புக்' மூலம், வேலை தேடி வந்தார்.
அப்போது ஒரு சிமென்ட் நிறுவனத்தின் விளம்பர, 'லிங்க்' வந்தது. அதை அழுத்தியதும், அவருக்கு, 'வாட்ஸாப்'பில் எஸ்.எம்.எஸ்., வந்தது.
அதில் வந்த மொபைல் எண்ணிலிருந்து, மனோஜ்குமாரை தொடர்பு கொண்ட ஒருவர், சிமென்ட் நிறுவனத்தில் டீலர்ஷிப் வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பி, கடந்த செப்., 6ம் தேதி முதல், அக்., 10ம் தேதி வரை, 5 தவணைகளாக, 7.36 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் டிபாசிட் செய்தார்.
அதன் பின், அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை, மனோஜ்குமார் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அளித்த புகார் படி, வேலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.