/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பக்கெட் நீரில் மூழ்கி பெண் குழந்தை பலி
/
பக்கெட் நீரில் மூழ்கி பெண் குழந்தை பலி
ADDED : மே 07, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் : வேலுார் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு பகுதியை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் விநாயகம், 30; இவர் மனைவி துர்கா, 26; இவர்களுக்கு ஒரு வயதான சகிதா என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை துர்கா வீட்டில் சமையல் செய்தபோது, குளியல் அறையில் இருந்த பக்கெட் நீரில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி தலைகுப்புற பக்கெட்டில் விழுந்து மூழ்கியது. குழந்தையை, துர்கா தேடியபோது, பக்கெட் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்தது.