/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ
/
சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ
ADDED : அக் 10, 2025 09:39 PM
காட்பாடி:திருவலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், திருவலம் பகுதி கூலித்தொழிலாளி அருண்குமார், 23, என்பவரும், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். சிறுமி கர்ப்பமானார்.
மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, சிறுமி திருமண வயதை எட்டாதது தெரிய வந்ததை தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து காட்பாடி மகளிர் நல அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்பாடி மகளிர் போலீசில் அவர் புகார் அளித்தார். அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.