/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சோ
/
மாணவிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சோ
ADDED : அக் 06, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் டவுன், தென்னமரத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்தி, 20, வேலுார் பள்ளி ஒன்றில் படிக்கும், 16 வயது பிளஸ் 1 மாணவியிடம், காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி, தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
காதலிக்காவிட்டால், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டவே, பயந்து போன மாணவி காதலிப்பதாக கூறினார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கார்த்தி, பாலியல் தொல்லை கொடுத்தார். பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார்.
அவர்கள் புகாரின்படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், கார்த்தியை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.