/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
/
மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
ADDED : ஏப் 24, 2025 02:40 AM
வேலுார்:மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி எல்.ஜி., நகரை சேர்ந்தவர் முருகன், 48; போர்வெல் மோட்டார் பழுது பார்ப்பவர். இவரது மனைவி அன்பழகி, 45. தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த முருகன், மின் ஒயரை எடுத்து, தன் வீட்டு கதவில் பொருத்தினார். தொடர்ந்து தண்ணீரை எடுத்து, வீட்டிற்குள் ஊற்றி மின் இணைப்பை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து, அன்பழகி கதவை திறக்க முயன்றார்.
அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்ட அவர், அலறி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து, அன்பழகியை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விருதம்பட்டு போலீசார், முருகனை கைது செய்தனர். முருகன், ஏற்கனவே இருமுறை மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயன்றது தெரியவந்தது.

