/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பங்கு சந்தையில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
/
பங்கு சந்தையில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
ADDED : ஏப் 03, 2025 03:08 AM
வேலுார்:வேலுார் அருகே, பங்கு சந்தையில் முதலீடு செய்து, பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி பெருமாள் கோவிலை சேர்ந்த மணி மகன் கார்த்திக், 40. இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு, 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனர்.
கார்த்திக் பெங்களூருவில் உள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு பங்கு சந்தை முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது, சில ஆயிரம் முதல், சில லட்சம் வரை பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதற்குரிய பங்குகளை வாங்கியும், விற்பனை செய்தும் வந்தார்.
இதில் நஷ்டம் வரவே, கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லத்தேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

